Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை சட்டக் கல்லூரியில் நள்ளிரவு முதல் ஆரம்பித்த உள்ளிருப்புப் போராட்டம்! #NEET

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி சார்பாக, நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு நாளும் சட்டக் கல்லூரி மாணவர்கள், அவர்களின் கோரிக்கையை முன்வைத்து வெவ்வேறு வடிவங்களில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நள்ளிரவிலிருந்து அவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.  

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள்

இதுகுறித்து சட்டக் கல்லூரி மாணவரான கார்த்திக், 'நீட் தேர்வினால் ஒரு மாணவி இறந்திருக்கிறார். மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களுக்கு எதிரான இந்த நீட் தேர்வை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களின் அடிப்படைக் கோரிக்கை. அந்த மாணவியின் தற்கொலைக்குக் காரணமே மத்திய மற்றும் மாநில அரசுகள்தான். அவர்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நீட் தேர்வை ரத்துசெய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அடுத்தடுத்து எங்கள் போராட்டத்தை வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுப்போம்' என்று தெரிவித்தார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close