Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாகர்கோவிலில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் பலி!

நாகர்கோவில் அருகே உள்ள கட்டையன் விளையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், வெளிநாட்டில் வேலைசெய்துவருகிறார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு சஜீத் என்ற 5 வயது மகன் உள்ளார். இவர், நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

 மருத்துவப் பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சஜீத் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துபோனார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இந்தக் காய்ச்சல் காரணமாக, ஏராளமானவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை, சுகாதார அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டெங்கு காய்ச்சல், எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது சுகாதாரத்துறை, சித்த மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் போர்க்கால அடிப்படையிலான நோய் தடுப்பு நடவடிக்கைகளால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தற்போது கூறுகிறது. இருந்தாலும் டெங்கு குறித்த அச்சம், மக்களிடமிருந்து போகவில்லை. மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close