Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடியில் மீடியாக்களிடம் பேச்சைத் தவிர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போப் கல்லூரி, தன்னாட்சி பெற்றதன் துவக்கவிழா மற்றும் அறிவியல் பிரிவு விரிவாக்கக் கட்டடத் திறப்புவிழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடைசி வரை மீடியாக்களிடம் பேசுவதைத்  தவிர்த்துவிட்டுச் சென்றார். 

எடப்பாடி பேச்சு

சாயர்புரம் போப் கல்லூரி, தன்னாட்சிக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு, அங்கீகாரச் சான்றிதழை அளித்து சிறப்புரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ஆறுமுக நயினாரின் மகள், ஜெயலலிதாவின் நிச்சயதார்த்த விழாவிலும் கலந்துகொண்டார். மதுரையிலிருந்து காரில் வந்த முதல்வருக்கு, தூத்துக்குடி மாவட்ட எல்லையான சிந்தலக்கரையிலிருந்து சாயர்புரம் வரை  எட்டு இடங்களில் கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு அளிக்கப்பட்ட இடத்திலும், கல்லூரி நிகழ்ச்சி முடிவிலும், நிச்சயதார்த்த விழா முடிவிலும் என  எந்த இடத்திலுமே மீடியாக்களிடம் பேசுவதை முதல்வர் தவிர்த்துவிட்டார். 

முதல்வரிடம் சென்று மைக்கை நீட்டியும் சிரித்துக்கொண்டு வேகமாக நடந்தபடியே காரில் ஏறிக் கிளம்பிச்சென்றார். ’’நாளை, தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் முருகன் இல்லத்திருமண விழாவில் கலந்துகொள்ள அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தூத்துக்குடிக்கு வருகிறார். இந்நிலையில், பொதுக்குழு பற்றியும்  சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்தும் மீடியாக்கள் ஏதும் கேள்வி எழுப்பினால், அதற்கு எடப்பாடியார் சொல்லும் பதிலைப் பொறுத்து நாளை திருமண விழாவில் தினகரன் பதிலடிகொடுத்து பகீரைக் கிளப்புவார் என்பதால்தான் மீடியாக்களிடம் வாய் கொடுக்காமல் அவசரமாகக் கிளம்பிவிட்டார் முதல்வர்’’ என்றனர் கட்சியினர். 

நாளை காலை தூத்துக்குடிக்கு விமானம்மூலம் வரும் தினகரன், அங்கிருந்து கருங்குளத்தில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் முருகன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட பின் நெல்லைக்கு வருகிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close