Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாளை ஆளுநரைச் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்..!

ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சந்திக்க உள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் ஒன்றிணைந்தது முதல் தமிழகத்தில் பல்வேறு திருப்பங்கள் நடந்துவருகின்றன. டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் எழுப்பிவருகின்றனர். ஏற்கெனவே ,டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ஆளுநரைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்குக் கொடுத்த ஆதரவை திரும்பப்பெற்றனர். இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் மற்றும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில், வித்யாசாகர் ராவை மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சந்திக்க உள்ளார். பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close