Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடையாளம் தெரியாதவர்களிடம் நன்கொடை; மலைக்கவைக்கும் அரசியல் கட்சிகள்!

நாட்டின் மிகப் பெரிய இரு கட்சிகளும் அடையாளம் தெரியாதவர்களிடம் இருந்து ரூ.646 கோடியை நன்கொடையாகப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

நன்கொடை பெறுவதில் பாரதிய ஜனதா கட்சி முதலிடம்

இதில், பாரதிய ஜனதா கட்சிதான் முதலிடம்.  2015-16-ம் ஆண்டில் மட்டும் ரூ.461 கோடியை அந்தக் கட்சி பெற்றிருக்கிறது.  அந்தக் கட்சிக்குக்  கிடைத்த நன்கொடையில் இது, 81 சதவிகிதம் ஆகும். காங்கிரஸ் கட்சிக்கு அடையாளம் தெரியாதவர்கள் வழங்கியது, ரூ.186 கோடி. இது, 71 சதவிகிதம். இரு கட்சிகளும் சேர்ந்து, ரூ.646.82 கோடியை அடையாளம் தெரியாதவர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்றிருக்கின்றன. இரு கட்சிகளும்  மொத்தமாக பெற்ற நன்கொடை ரூ.832.42 கோடி. அதில், பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.570.86 கோடி கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி ரூ. 261.56 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 

அரசியல் கட்சிகளுக்கு ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை அளித்தால், பெயர், பான் எண் விவரங்களை  கட்சிகள் தேர்தல் கமிஷனுக்குத் தெரிவிக்க வேண்டும். இந்தப் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்காக, பெரும்பாலானோர் ரூ. 20 ஆயிரத்துக்குக் குறைவாக நன்கொடை கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது.  

2016-ம் ஆண்டு  மட்டும் மொத்தம் ரூ.1,033 கோடியை, நாட்டின் 7 தேசியக் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.107.48 கோடி, பகுஜன் சமாஜ்வாடி ரூ.47.39 கோடி, திரினாமுல் காங்கிரஸ் ரூ.34.58 கோடி, தேசியவாத காங்கிரஸ் ரூ.9.14 கோடி, மார்க்சிஸ்ட் கட்சி ரூ.2.18 கோடியை நன்கொடையாகப் பெற்றிருக்கின்றன. 

 2014-15-ம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சி ரூ. 970.43 கோடியை நன்கொடையாகப் பெற்றிருந்தது. 2015-16-ம் ஆண்டில், பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் 41 சதவிகிதம் சரிந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வருவாய் ரூ. 593.31 கோடியிலிருந்து 261.56 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது, 56 சதவிகிதம் குறைந்துள்ளது. தங்களைப் பற்றிய விவரங்களுடன் நன்கொடை அளித்தவர்களிடமிருந்து பாரதிய ஜனதா கட்சி, ரூ. 97.27 கோடியையும், காங்கிரஸ் கட்சி ரூ.20.42 கோடியையும் பெற்றுள்ளன. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close