Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நீட்'டுக்கு எதிர்ப்பு! கோயில் கோபுரம் மீது ஏறி மாணவர்கள் தற்கொலை மிரட்டல்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்தில் ஏறி, மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகப் போராட்டம் நடத்தியது இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட்டை ரத்து செய்யும்படியும், மத்திய- மாநில அரசுகளுக்கெதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டம் தமிழகம் முழுக்க வீரியமாக நடந்துகொண்டிருக்கிறது. 

திருவில்லிபுத்தூர்


இந்நிலையில், இன்று காலை புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அங்கு போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பையும் மீறி இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கோபுரத்தின் மீது ஏறிவிட்டனர். அங்கு நின்றுகொண்டு, மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்து அறிவிக்க வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.

திருவில்லிபுத்தூர்

தமிழக அரசின் சின்னமாக இக்கோயில் கோபுரம் விளங்கிவருகிறது. தகவல் தெரிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களுடன் சமாதானம் செய்து கீழே இறக்க முயற்சி எடுத்தனர். அதற்கு மாணவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் ஒருவழியாக அவர்களை இறக்கி கைதுசெய்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close