Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகப் பதவிப் பிரமாணம் ஏற்றதற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்தன. அதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் முன்னிலையில் துணைமுதல்வராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வழக்கறிஞர் இளங்கோவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், 'பன்னீர்செல்வத்துக்கு, ஆளுநர் துணை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தது செல்லாது. அரசியலமைப்புச் சட்டத்தில் துணை முதல்வர் என்ற பதவி இல்லை' என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை' என்று கூறித் தள்ளுபடிசெய்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close