Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அசல் ஓட்டுநர் உரிமம் விவகாரம்! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

அசல் வாகன ஓட்டுநர் உரிமத்துக்கு எதிரான வழக்கில், இன்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 


வாகன ஓட்டிகள், செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவு, வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக, தமிழக அரசு இன்று பதில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவில், 'கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டு வரை 32,000 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அந்த விபத்தில் 9,881 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துகளைக் குறைக்கவே, அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படுகிறது. மோட்டார் வாகனச் சட்டத்தில் ஏற்கெனவே உள்ள விதிமுறைகளைத்தான் தற்போது பின்பற்றுகிறோம். அசல் உரிமம் தொலைந்துபோனால், மாற்று உரிமம் பெறுவதில் எந்தச் சிக்கலும் இல்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close