Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கௌரி லங்கேஷ் கொலை: சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் கர்நாடக முதல்வர் ஆலோசனை!

கௌரி லங்கேஷ்கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக்குழு அதிகாரிகளுடன், அம்மாநில முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

பெங்களூருவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ், அவரது வீடு முன்பாக அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் நீதி கேட்டு குரல் கொடுத்துவருகின்றனர். இந்நிலையில், இந்தப் படுகொலை குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக, காவல்துறை ஐ.ஜி. தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை கர்நாடக முதல்வர் சித்தராமையா அமைத்து உத்தரவிட்டார். மத்திய அரசும், மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளது.

இதையடுத்து, சிறப்புப் புலனாய்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகளுடன் சித்தராமையா இன்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார். விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும், விரைவில் கொலையாளிகளைக் கண்டறிந்து, கைதுசெய்யுமாறும் அப்போது முதல்வர் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close