Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு கிருஷ்ணசாமிக்கு வக்கீல் நோட்டீஸ்!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு அரியலூர் மாவட்ட தி.மு.க நிர்வாகி சிவசங்கரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


மறைந்த மாணவி அனிதா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு தி.மு.க நிர்வாகி சிவசங்கரன் மற்றும் கல்வியலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் உதவியாக இருந்தனர். அந்த வழக்கில் அனிதாவுக்குப் பாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து செப்டம்பர் 1-ம் தேதி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே, நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

ஆனால், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அனிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும். சிவசங்கரன் மற்றும் கல்வியலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர்தான் அனிதாவை தற்கொலை செய்ய தூண்டியுள்ளனர் என்பது போன்று பேசிவருகிறார். இந்நிலையில், கிருஷ்ணசாமிக்கு, சிவசங்கரன் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடரப்படும். எனது புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசியதற்காக 5 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close