Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்' - கம்யூனிஸ்ட் கட்சிகள்

நீட் தேர்வால், மருத்துவக் கல்வியை இழந்த மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் கடந்த 7 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்இந்நிலையில், அனிதா மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரியும் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி அருகே அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவைச் சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக் அப்துல்லா, சூர்யா, ரியாத் நிஷா உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள், கடந்த 7 நாள்களாகத் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றர். பல்வேறு நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இவர்கள், முகத்தில் கரியைப் பூசியும், தூக்குக் கயிற்றில் தொங்கும் போராட்டம், மெழுகுவத்தி  ஏந்துதல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராடும் இளைஞர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது பேசிய முத்தரசன், “மக்கள் பிரச்னைக்காக இங்கே 7 நாள்களாகப் போராட்டம் நடக்கிறது. மாணவர்கள் தங்களையே வருத்திக் கொள்ள காலவரையற்ற போராட்டம் நடத்துகிறார்கள் .போராடுபவர்களின் கோரிக்கையை கேட்க இங்கு யாரும் இல்லை. கலெக்டர் அலுவலகம் அருகில்தான் உள்ளது. தாசில்தார் மட்டும் உண்ணாவிரதம் தொடங்கிய இரண்டாவது நாளில் வந்ததாகக் கூறுகிறார்கள். அதன் பிறகு யாரும் வரவில்லை. சபரிமலா பதவியைத் துறந்திருக்கிறார். அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. இந்த அரசு என்ன செய்யப் போகிறது. சபரிமாலாவின் ராஜினாமா ஏற்கப்படுமா? ஏற்கப்படாதா.? மாணவர்கள் மீது அக்கறை இருக்கிற அரசானால், எடப்பாடி அரசு இந்தப் பிரச்னையில் தீர்வு காண முன் வர வேண்டும். இதை மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெற முயற்சி செய்ய வேண்டும். இல்லை என்றால் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமாகும். 1965 ல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் போலவே, நீட் எதிர்ப்பு வலுப்பெறும். எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்பதுதான் ஜனநாயக உரிமை. மாறாகப் பெரும்பான்மை இருப்பதாகத் தவறான கருத்தைத் தொடர்ந்து தமிழக மக்களுக்குக் கூறி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்குப் பதவி மீதுதான் அக்கறை. அவருக்கு மக்களின் துளியும் அக்கறையில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் வாக்குறுதி தவறிய எடப்பாடி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீட் விஷயத்தில் தமிழகத்துக்கு விலக்கு தருவோம் என்றும், பிறகு இல்லை என மாற்றி மாற்றிப் பேசினார். ஆகவே அவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றவர்,

ஜனநாயகத்தைக் காக்க ஆளுநர் பெரும்பான்மை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு மனது வைத்தால் நீட் விலக்கு பெற முடியும். மாநில அரசும் அழுத்தம் தர வேண்டும்.இரட்டை இலை எந்த அணிக்குப் போகும் என்பது மோடிக்குத்தான் தெரியும்” என்றார்.

 

அடுத்து ஜி.ராமகிருஷ்ணன்,

நீட் தேர்வு பிரச்னைக்காக எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என கம்யூனிஸ்டுகள் வலியுறுத்த ஆரம்பித்திருப்பதால் அரசியலில் பரபரப்பு உண்டாகி உள்ளது.“மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் விலக்கு கேட்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரியும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராடுகிறார்கள். மத்திய மாநில அரசின் துரோகத்தை கண்டித்து இந்தப். போராட்டம் நடைபெறுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட நீட் விலக்கு குறித்து கருத்து தெரிவித்திருந்தார்கள். மத்திய அரசு உடனடியாக நீட்டிலிருந்து விலக்கு அளிக்கும் அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று திருச்சியில் எஸ்.எப்.ஐ மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த போது நிறைய எதிர்பார்த்தோம். ஆனால், பொதுக்கூட்டம் மட்டுமே அறிவிப்பாக வந்தது ஏமாற்றம். பொதுக்கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். தமிழக அரசு இந்தப் போராட்டங்களைக் கண்டுகொள்ளவில்லை. போராட்டத்தைக் கண்டு விலக்கு அளிக்காமல் பள்ளி கல்லூரிகளை மூடுவது நியாயமானது அல்ல”என்றார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close