Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூடங்குளத்தில் புதிய அணு உலைகள் கட்டும் விவகாரம் - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகளின் "கான்க்ரீட் பணிகளுக்காக" இந்திய அணுசக்தி ஒழுங்காற்று ஆணையம் அளித்த அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம், மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கூடங்குளம் அணுமின் நிலையம்

ஏ.இ.ஆர்.பி. எனப்படும் இந்திய அணுசக்தி ஒழுங்காற்று ஆணையம் (AERB- Atomic Energy Regulatory Board) கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான முதற்கட்ட கான்கிரீட் கட்டுமானம் (FPC – First Pour of Concrete) மற்றும் அதையடுத்து அடுத்தகட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளித்தது. ஏ.இ.ஆர்.பி தன் அடிப்படை விதிமுறைகளை மீறி இந்த அனுமதியை வழங்கியுள்ளதை ரத்து செய்யக் கூறி உயர் நீதிமன்றத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மத்திய அரசிற்கும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திற்கும், தேசிய அணுமின் கழகத்திற்கும் அனுமதி கொடுத்த ஆணையை ஏன் ரத்து செய்யக் கூடாது என நோட்டீஸ் கொடுத்தது. வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதில் தரும்படியும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close