Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 வடசென்னை மக்கள் பீதி ! குடிநீரில் கலக்கும் கழிவுநீர்...



                      

குடிநீர் தான் ஆனால் கழிவுநீர் கலந்த குடிநீர்குடிநீர் தான்... ஆனால், அதில் சம அளவில் கழிவுநீர்  கலந்து வருவதால் வடசென்னை மக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தண்ணீர்ப் பஞ்சத்தில் தமிழகம் திணறிக் கொண்டிருந்தது. மழை பெய்தால் மட்டுமே  பஞ்சத்தில் இருந்து மக்கள் மீளமுடியும் என்ற  நிலையும் இருந்தது. இந்நிலையில், கடந்த பத்து நாள்களாக மாலை வேளைகளில் ஓரளவு மழை பொழியவே  வீட்டுக் குழாய்களில் தண்ணீர் வர ஆரம்பித்தது. மழை பெய்தும் அதை முறையாக தேக்கி வைக்கும் 'மழைநீர் சேகரிப்பு' திட்டம்  நடைமுறையில் இல்லாததால், எஞ்சிய மழைநீர் மொத்தமும் கழிவு நீர்க்கால்வாயில் கலந்து ஓடின.
 இது தவிர, மெட்ரோ ரயில்திட்டப் பணியால் ஆங்காங்கே அதிர்வுகள், உடைப்புகள் எனப்  பாதிப்பு உள்ளன.  இருபது ஆண்டுகளைக் கடந்து விட்ட பழைய பைப்-லைன்களே, பூமிக்கு அடியில் புதைக்கப் பட்டிருப்பதால், அவைகள் சிறு அதிர்வுக்கே நொறுங்கி விடுகின்றன. மெட்ரோ ரயில் திட்டத்தால் குடிநீர்க் குழாய்களும், கழிவுநீர்க் குழாய் இணைப்புகளும்  பல இடங்களில் உடைந்தும் காணப்படுகின்றன.  இப்படிப்பட்ட சூழ்நிலையால் சாலைகளில் குடிநீரும், கழிவு நீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மலேரியா, டெங்கு போன்ற ஆபத்தான விஷக்காய்ச்சல்களும் இதனால் சாதாரணமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. வீடுகளில் உள்ள குழாய்களில் வரும் மெட்ரோ வாட்டர், மஞ்சள் மற்றும் அடர்த்தியான பழுப்பு  நிறங்களில் நாற்றத்தோடு வருகிறது. 
நம்மிடம் பேசிய கல்யாணசுந்தரம், "வண்ணாரப்பேட்டை பாண்டியன் தியேட்டர் பார்த்தசாரதி தெரு, டி.பி.கே. தெரு, முத்தையா தெரு, மார்க்கெட் பகுதி, ஹவுசிங் போர்டு, லாலாகுண்டா போன்ற பகுதிகளில் இப்படித்தான் வருகிறது. இப்போதுதான் அதிகாரிகளைப் பார்த்து புகார் சொல்லிவிட்டு வருகிறேன்" என்றார். பாட்டில்களில் இந்த நீரைப் பிடித்து வைத்துக் கொண்டு அதிகாரிகளைச் சந்தித்து பொதுமக்கள் மனு கொடுப்பது இங்கே அன்றாடக் காட்சி.  தண்ணீரின் நிறமும், நாற்றமும் அதேபோல் அன்றாடக் காட்சியாக மாறாமலே இருக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close