Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாக்டோ - ஜியோ போராட்டம் - ஒப்பாரி வைத்த அரசு ஊழியர்கள்..!

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டி தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று துவங்கினர். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் 8 இடங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய மறியல் போராட்டத்தால் 4000 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் 2-வது நாளாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தங்களின் கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால், மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் பூட்டப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள்.

போராட்டத்தின் ஒருபகுதியாக அரசு ஊழியர்களால் ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. அச்சமயம் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த சத்துணவு அமைப்பாளர் சாந்தி என்பவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு மயங்கி விழுந்த அரசு ஊழியர் சாந்தியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close