Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெயர் பலகை வைப்பதில் பிரச்னை: 40 ஆண்டுகால வழக்கை முடித்து வைத்த உயர் நீதிமன்றம்!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் - பரமக்குடி சாலையில் அடுத்தடுத்து அமைந்துள்ளது அண்டூரணி, காயா ஓடை கிராமங்கள். இவ்விரு கிராமங்களுக்கு இடையே ஊர் பெயர் பலகை வைப்பது தொடர்பாக கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில், அண்டூரணி பெயர் பலகை அப்புறப்படுத்தப்பட்ட இடத்தில் காயா ஓடை என பெயர் பலகை வைக்கக்கோரி செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'இரு கிராமங்களின் வரைபடத்தை பார்க்கையில் நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தில் காயா ஓடை கிராமமும், மற்றொரு பக்கத்தில் அண்டூரணி கிராமமும் அமைந்துள்ளன. இந்த கிராமங்கள் இடையே மதப்பிரச்சினையும் உள்ளது. இரு கிராமங்களிலும் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற்காக இரு கிராமங்களிலும் அந்தந்த கிராமங்களின் பெயர் பலகையை வைக்க வேண்டும். அதன்படி இரு கிராமங்களிலும் ஒரே அளவில் அந்தந்த கிராமங்களின் பெயர் பலகையை வைக்க வேண்டும். அந்த பெயர் பலகையில் சம்பந்தப்பட்ட கிராமங்கள் இருக்கும் திசையை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இரு கிராமங்களிலும் தனித்தனியே பெயர் பலகை வைப்பது மட்டுமே இரு ஊர்களுக்கு இடையே 40 ஆண்டுகளாக நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இதனால் இரு கிராமத்தினரும் தங்களின் பகைமையை மறந்து ஒற்றுமையாக இருப்பார்கள் என நீதிமன்றம் நம்புகிறது' என கருத்து தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close