Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அபுதாபியில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க கோரிக்கை

கத்தார் நாட்டிலிருந்து படகு மூலம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் அபுதாபியில் சிறைப்பிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்டுத் தர கேட்டு மீனவர்களின் குடும்பத்தினர், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு ரீகன், கரோலின் ஜாகின், ஜான் பிரபாகரன், ரீகன், ஜயோ கிளாட்வின், ஜோ ஸ்டாலின் ஆகிய மீனவர்கள் கத்தார் நாட்டின் வக்ரா பகுதியில் உள்ள ஜாபர் ஜூபைல் என்பவரது படகில் கடந்த மாதம் 25-ம் தேதி  ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இதையடுத்து, 26-ம் தேதி அபுதாபி கடற்படையினரால் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை அவர்களது குடும்பத்தினருக்கோ அல்லது  இந்திய தூதரகத்திற்கோ கைது நடவடிக்கைப் பற்றி அபுதாபி கடற்படை மூலம் தகவல் அளிக்கப்படவில்லை. தற்போது கத்தார் நாட்டிற்க்கும் ஆண்டை நாடுகளுக்குமான உறவில் சிக்கல் நிலவிவ வருகிறது. இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களையும் அபுதாபி கடற்படையிடம் இருந்து மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிறைபிடிக்கப்பட்ட 5  மீனவர்களின் குடும்பத்தினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானை சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close