Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஸ்டாலின் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறோம்!' - தமிழிசை பதிலடி

திருச்சியில் நடைபெற்ற நீட் தேர்விற்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க-வுக்கு அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டிருந்தார். மேலும், அதற்கு பா.ஜ.க பதில் சொல்லுமா என்றும் கேட்டார். இதற்கு பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், 'ஸ்டாலின் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்

நேற்று திருச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின், 'இதே திருச்சியில் எதிர்க்கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு எதிராக பா.ஜ.க சார்பி்ல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்கிறார்கள். அதே பா.ஜ.க-வினருக்கு நான் கேட்கும் கேள்வி நீட் தேர்வு பிரச்னை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்ட அந்த இரண்டு மசோதாக்கள் என்னவாயிற்று? டேபிளுக்கு அடியில் பூட்டி வைத்தீர்களா?‬ ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கடைசிவரை சொல்லி, நம்பவைத்து, கழுத்தை அறுத்தீர்களே, அந்த ஓராண்டு விலக்கு இப்போது என்னாயிற்று? அவசரச் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்று சொல்லிவிட்டு, பிறகு பல்டி அடித்தீர்களே, ஏன்? ‬

‪இறைச்சிக்காக மாடுகளை விற்பதைத் தடுக்க அவசர அவசரமாக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினீர்களே, இந்த நீட் தேர்வுக்காக ஒரு அவசரச் சட்டத்தினை இயற்றும் யோக்கியதை, தெம்பு, திராணி இல்லையா? மீனவர்களைப் பாதுகாப்போம் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தீர்களே, மூன்று ஆண்டுகள் முடிந்த பிறகும் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா? இன்றைக்கு டெல்லியில் விவசாயிகள் நாள் கணக்கில், மாதக்கணக்கில் பல கோணங்களில் போராடிக் கொண்டிருக்கிறார்களே இதுவரையில், பிரதமர் மோடி அவர்களை அழைத்து, சந்தித்ததுண்டா? இதற்கெல்லாம் நாளை நடைபெறவுள்ள பி.ஜே.பி-யின் கூட்டத்தில் மனசாட்சியின் மீது கைவைத்து பதில் சொல்ல வேண்டும்' என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தி.மு.க செயல் தலைவர் அண்ணன் ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு அதே திருச்சியில் பதில் சொல்ல காத்திருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close