Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விபத்துக்கு வழிவகுக்கும் அண்ணா சாலை அறிவப்புப் பலகை கம்பம்..!

சாலையை ஆக்கிரமித்துள்ள அறிவிப்புப் பலகை கம்பங்கள்

கடந்த மாதம் மூன்றாம் தேதி சென்னை, அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசா எதிரில் அரசுப் பேருந்து ஒன்று அறிவிப்புப் பலகை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்தில் 6 பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. சாலையின் நடுவே இருந்த அறிவிப்புப் பலகை கம்பத்தால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், ஸ்பென்சர் பிளாசாவுக்கு அருகிலேயே அதே போன்றதொரு அறிவிப்புப் பலகை கம்பம் சாலையின் நடுவே நின்று கொண்டிருக்கிறது. இந்தக் கம்பத்தினாலும் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஒரு மாதத்துக்கு முன்னர் விபத்து நடந்த பகுதியின் மிக அருகில் இருக்கும், இந்தக் கம்பத்தை அகற்றுவது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.  

சாலையின் குறுக்கேயுள்ள அறிவிப்புப் பலகை கம்பம்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close