Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேலடுக்கு சுழற்சியின் காரணமாகக் கொட்டித்தீர்த்த மழை!

மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

மழை

கோடை காலம் முடிந்து, தென் மேற்குப் பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் சற்று வெப்பம் குறைந்து, மழைப்பொழிவு இருந்தது. தற்போது, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை வலுத்துவருகிறது. நேற்று, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு இருந்தது. வெயிலினால் சில நாள்களுக்கு முன்னர் வாடிவதங்கிய சென்னை மாநகரம், நேற்று பெய்த மழையால் சற்று வெப்பம் குறைந்து காணப்படுகிறது.

தமிழகத்தின் உள்மாவட்டங்களில், இன்னும் ஒரு வார காலத்துக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலையை அறிவித்துள்ள சென்னை வானிலை மையம், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று மாலை அல்லது இரவு லேசான அல்லது கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது. அதிகப்பட்சமாக கொடைக்கானலில் 10.7 செ.மீ மழை பதிவானது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close