Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்களின் சபரி மலையில் நாளை ஆவணி அஸ்வதி பொங்கல்

பெண்களின் சபரி மலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம்  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆவணி  திருவிழா இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று காலை 4.30 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது.
5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம் நடந்தது. அதன்பின் 6.30 மணிக்கு உஷ பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜை  நடக்கிறது.

இரண்டாம் நாளான நாளை ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துக்கொள்ளும் ஆவணி அஸ்வதி பொங்கல் வழிபாடு நடைபெற இருக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானமும்  1 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு  7.30 க்கு மண்டைக்காடு தேவசம் பள்ளியில் 10 வது மற்றும் 12 வது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சமய வகுப்பு மூன்று மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து 8.30 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது. இந்த நிகழ்வுகளை மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் தேவச நிர்வாகம் செய்துள்ளது. நாளை நடக்கும் ஆவணி அஸ்வதி பொங்கலிக்கு குமரி மாவட்டத்தில் இருந்தும் கேரளாவில் இருந்தும் அதிகமான பெண் பக்தர்கள் வர இருக்கிறார்கள். அவர்கள் 5,004 பானைகளில் பொங்கலிட்டு மண்டைக்காடு பகவதி அம்மனை வழிபடுகிறார்கள். ஆவணி அஸ்வதி பொங்கலை முன்னிட்டு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close