Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடி துறைமுகத்திற்கு 4 கடற்படை கப்பல்கள் வருகை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு இந்திய கடற்படைக்குச்  சொந்தமான 4 பயிற்சிக் கப்பல்கள் வந்து சேர்ந்துள்ளன.

கொச்சி துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திலிலுள்ள கூடுதல் தளத்திற்கு வந்தடைந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான பயிற்சிக் கப்பல்களான ஐ.என்.எஸ். தீர், ஐ.என்.எஸ். சுஜாதா, ஐ.என்.எஸ். சர்துல் மற்றும் ஐ.என்.எஸ்.  சர்தி ஆகிய 4 பயிற்சிக் கப்பல்களை நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தில் உள்ள ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை தள அதிகாரிகள் வரவேற்றனர். 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ள 4 கப்பல்கள்

இந்தியக் கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள், ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் ரோந்துப் பணிக்காகவும், மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களின் பயிற்சிக்காகவும் இந்தியாவிலுள்ள பல துறைமுகங்களுக்கு செல்வதைப் போல தூத்துக்குடி துறைமுகத்திற்கும் இக் கப்பல்கள் வந்துள்ளன.  இக் கப்பல்களில் உள்ள கடற்படை வீரர்கள் பயிற்சிக்காக விஜயநாராயணத்திலுள்ள ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படை தளத்திற்கு  அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்த 4 கப்பல்களில் தேவையான எரிபொருளும் அத்தியாவசிய தேவைக்கான தண்ணீரும் நிரப்பப்பட்டது.

கடற்படை வீரர்களுக்கு பயிற்சிகள் முடிந்ததும் நாளை காலை இந்த 4 கப்பல்களும் ரோந்துப் பணிகளை கவனிக்க தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு சென்னை துறைமுகம் வழியாக விசாகப்பட்டினம் செல்ல  உள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close