Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜிமிக்கி கம்மலை விட நீட் பிரச்னை அவசியம்': உறியடி இயக்குநர் விஜய்குமார்

உறியடி படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் விஜய்குமார். இவர் தொடர்ந்து சமூக பிரச்னைகள் குறித்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், நீட் பிரச்னை குறித்து விஜய்குமார் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய்குமார்

 

அதில்,  "முதலில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வராமல், பரீட்சை முறையில் மாற்றம் கொண்டு வந்தது சரியா? கிராமப்புறங்களில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவன், அந்தப் பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற முடியமா? அப்போது, பாடத்திட்டத்தில் தானே முதலில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அதைத்தானே மேம்படுத்த வேண்டும். ஆனால், இது அவர்களது முன்னேற்றத்தை தடுப்பதாகவே உள்ளது. இதை எதிர்த்து போராட வேண்டாமா? சிலர் போராடிக் கொண்டுத்தான் இருக்கிறார். போராடதவர்கள், நாம் வாக்களித்த அரசியல்வாதிகளிடம் கேள்வி கேளுங்கள். 'இறங்கி நீங்கள் போராடுங்கள். உச்ச நீதிமன்றம் கூறியது போல அமைதியான முறையில் போராடுங்கள்... உண்ணாரவிரதம் இருங்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுங்கள்' என்று அவர்களிடம் கேளுங்கள். சமூகவலைதளங்களில் அவர்களை டேக் செய்து கேளுங்கள்.


நீட் தேர்வை எதிர்த்துப் போராடி நிறையப்பேர் அடிவாங்கி கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் நமது ஆதரவை தெரிவிக்காவிடினும், வேறு ஒரு விஷயத்தை ட்ரெண்ட் செய்ய வேண்டாமே. தற்போது, ஜிமிக்கி கம்மல் என்ற ஒரு பாடல் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதை நாம் ட்ரெண்ட் செய்வதை, நீட்டை எதிர்த்துப் போராடுபவர்கள் ஏளனமாகதானே பார்ப்பார்கள். எனவே, அதை ட்ரெண்ட் செய்ய வேண்டாம். அந்த ஜிமிக்கி கம்மல் பாடலை உருவாக்கிய பெண்கள், நீட் தேர்வு குறித்து தெரிந்து கொண்டு அது தொடர்பாக ஒரு வீடியோ செய்யுங்கள்.

 
ஜாதியை ஒழிக்க எல்லோரும் சரி சமம் என்று நம் குழந்தைகளுக்கு அனைவரும் கற்றுக்கொடுக்க வேண்டும். பொருளாதரத்தில் கஷ்டப்படும் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். கல்வி மற்றும் மருத்துவம் போன்றவை மக்களுக்கு அடிப்படையான ஒன்று. எனவே, டாஸ்மாக்கை நடத்தும் அரசு கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றை முழுதாக எடுத்து நடத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close