Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை... அதன் விதை பயமிலாக் கேள்வி' - கமல் ட்வீட்

பிக் பாஸ் நிகழ்ச்சி, அ.தி.மு.க அமைச்சர்களுடன் மோதல், ட்விட்டர் கருத்துகள் என்று கமல் தற்போது செம ஆக்டிவாக இருக்கிறார். சமூக பிரச்னைகள் குறித்து தொடர்ந்து ட்விட்டர் மூலமாக கருத்து தெரிவித்து வருகிறார். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை கமல் சந்தித்தார். தமிழகத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ள அனிதாவின் மரணம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசன்

இதையடுத்து, “இந்த சட்டதை உருவாக்கியது நாம்தான். அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறென்றால் மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், அதை அவமானம் செய்வதும், தவறாகப் பேசுவதும் கூடாது. விவாதங்கள் மூலம் மாற்றத்தை கொண்டுவரமுடியும். வாருங்கள் விவாதிக்கலாம்” என்று நேற்று முன்தினம் ட்வீட் செய்திருந்தார்.


இதையடுத்து, நேற்று சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்குச் சென்று அவர் பார்வையிட்டார். பின், அது குறித்தும் ட்வீட் செய்தார். இந்நிலையில் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், வீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை.அதன் விதை பயமிலாக் கேள்வி. பகுத்துமறிவோம் பக்தியும் புரிவோம். தமிழ்க்கோவலர் வாழும் கோவில் தமிழ்நாடு வணங்குதல் நலம்" என்று ட்வீட் செய்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close