Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி நாளை திறப்பு!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி நாளை திறக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 


கல்லூரியை அரசே ஏற்று நடத்திட வேண்டும், அரசு மருத்துவக் கல்லூரிகளைப் போன்றே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக நிர்வாகம் கடந்த 6-ம் தேதி அறிவித்தது. இதையடுத்து, மாணவர்கள் கல்லூரி விடுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மாணவர்கள் தொடர்ந்து 12ஆவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசுப் பல்கலைக்கழகமாக இருந்தாலும், மருத்துவக் கல்லூரி சுயநிதி கல்லூரியாகச் செயல்படுவதால் தனியார் கல்லூரிகளைப் போன்று கட்டணம் வசூலிக்கப்படுவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி நாளை முதல் திறக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close