Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேமுதிக விரைவில் ஆட்சிக்கு வரும் -மதுரையில் பிரேமலதா பேச்சு

தே.மு.தி.க  தலைவர் விஜயகாந்த் இன்று மதுரை வந்தார்.  மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றிய  செயலாளர் மலைச்சாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன் மனைவி பிரேமலதாவுடன் இன்று காலை மதுரை வந்தார். திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் நான்கு இடங்களில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வரவேற்பு அளித்தனர். பின்பு திருமணத்தை நடத்தி வைத்தவர், மணமக்களை வாழ்த்திவிட்டு, ''தமிழகத்தில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆட்சி மக்களை ஏமாற்றுகிறது. தன் தொகுதி மக்களுக்கு கிணற்றை தர மறுத்தவர்தான் பன்னீர் செல்வம். யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்பது மக்களுக்கு தெரியும்”  என்று பேசினார்.

விஜயகாந்த்

பிரேமலதா பேசும்போது ''தேமுதிக தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து மற்ற கட்சிகள் பொறாமைப்பபடுகின்றன. 2007 -ல் மதுரைக்கு ஒரு திருமணத்துக்கு வந்தோம், அதன் பின்புதான் தே.மு.தி.க பலமான கட்சியாகி,  தமிழகத்தில் எதிர்கட்சியானது. 2017 இந்த திருமணத்துக்கு வந்துள்ளோம், அதனால் விரைவில் தேமுதிக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும். மக்கள் நலனுக்கு எதிராக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள்.'' என்றார்.

நீண்ட நாட்களுக்கு பின் சொந்த ஊரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து  விஜயகாந்த் பேசியதால் கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close