Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலமைச்சர் பழனிசாமி ஆட்சி சீரும், சிறப்புமாக இருக்கக் காரணம் என்ன தெரியுமா? - அமைச்சரின் புது விளக்கம்

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களது ஆன்மா உண்மையாகவே தமிழகத்தில் சுற்றி வருவதால்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் சீனிவாசன்


தருமபுரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான கால்கோள் நாட்டும் விழாவில் பேசிய அமைச்சர் சீனிவாசன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், ‘அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களின் 4 பேரைத் தவிர மற்ற அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக் கொண்டு விட்டனர். கடந்த 7 மாதங்களாக தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சியை அகல வேண்டும்; முதலமைச்சராக வர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு உதவும் வகையில் நம்முடைய கட்சியைச் சேர்ந்த சிலர் காட்டிக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் குள்ளநரி வேலைகளை சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களது ஆன்மா தமிழகத்தை சுற்றி வருவதால்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது. அவர்களது ஆன்மா நம்மை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பதால்தான் தருமபுரியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கான கால்கோள் விழாவை இன்றைக்கு நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தினகரன் அணியிலிருந்து வந்த ஜக்கையன் எம்.எல்.ஏ. மிகத்தெளிவாகக் கூறினார். ஒரு வருத்தத்தில், கோபத்தில் நாங்கள் அந்த அணிக்கு சென்று விட்டோம். அறுதிப் பெரும்பான்மை எங்கே இருக்கிறது என்று நாங்கள் பார்த்தோம். அந்த அடிப்படையில் இந்த ஆட்சி கவிழக்கூடாது. ஜெயலலிதாவின் ஆட்சி இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நான் மனம் திருந்தி வந்திருக்கிறேன் என்று ஜக்கையன் கூறினார். அந்த அணியிலிருக்கும் தோழர்கள், தங்களை அடைத்து வைத்துள்ளதாக செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். வெளியே விடாமல் அடைத்து வைத்திருப்பதாகவும், எத்தனை நாளைக்கு இந்த சிறைவாசம் என்றும் அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு நிச்சயமாக நாங்கள் ஆதரவு தருவோம் என்று அவர்கள் ஒவ்வொரு நாளும் தகவல் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, எந்தவித மோசமான சூழ்நிலையும் நமக்கு ஏற்படாது’ என்று அவர் பேசினார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close