Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பாசத்தால் வந்த இணைப்பு அல்ல; பயத்தால் வந்த இணைப்பு' - திருநாவுக்கரசர் விமர்சனம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அணிகள் இணைந்தது பயத்தால்தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். 

திருநாவுக்கரசர்


அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு டி.டி.வி. தினகரன் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இணைப்புக்குப் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த சூழலில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ‘ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு என்பது பாசத்தால் வந்தது அல்ல; பயத்தால் வந்தது. மத்திய அரசு அச்சுறுத்தி இந்த இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது முழுமனதுடனான இணைப்பாக செயல்படவில்லை. இந்த சூழலில் செயல்படமுடியாத ஒரு அரசாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, அரசின் தலைவராக இருக்கக் கூடிய ஆளுநரை மீண்டும் சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோர இருக்கிறோம். இந்த அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால், சட்டப்பேரவையைக் கூட்டி உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும்’ என்று அவர் கூறினார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close