Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நதிகளை மீட்க மிஸ்டுகால்  விவகாரம் - "பி.ஜே.பி.க்குத் தொடர்பில்லை"என ஈஷா  மறுப்பு  

'நதிகளை மீட்க மிஸ்டுகால் தரும்படி ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கொடுத்துள்ள எண், பி.ஜே.பி-யின் பிரத்யேக எண்' என்று கோவையைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ்   குற்றஞ்சாட்டுகிறார். நீரின் தேவையை வலியுறுத்தும் `நதிகளை மீட்போம்’ என்ற அமைப்பை  ஜக்கிவாசுதேவ் கோவையில் தொடங்கியுள்ளார். மேலும், இதன் பிரசார உத்தியாக கடந்த 3-ம் தேதி கோவையில் தொடங்கி நாடு முழுக்க கார்களில் பயணமும் மேற்கொண்டு வருகிறார். இந்த அமைப்பின் சார்பில், 'நதிகளை மீட்டு பாரதம் காக்க ‘8000980009’ என்ற செல்பேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்' என்று நாடெங்கும் விளம்பரம் செய்யப்படுகிறது. ''அந்த செல்பேசி எண் பி.ஜே.பி-க்குச் சொந்தமானது மட்டுமல்ல... இதன் பின்னணியில் இருப்பதும் பி.ஜே.பி-தான்'' என்கிறார், பியூஷ்மனுஷ்.

                        நதிகளை மீட்க மிஸ்டுகால் - ஈஷா பிரசாரத்தில் ஜக்கிவாசுதேவ்

நாம் பியூஸ்மனுஷிடம் பேசினோம்.   "நீர்நிலைகளை மீட்கப் புறப்பட்டவர்கள் கொடுத்துள்ள 8000980009 என்ற எண்ணை  கூகுளில் தேடிப் பார்த்தாலே போதும், இந்த எண்  பி.ஜே.பி-க்கு என்னென்ன  சேவைகள்  செய்தது என்பது தெரியும். பி.ஜே.பி மேற்கொண்ட, வல்லபபாய் படேல் சிலை வைப்பு, பான்மசாலாவுக்கு எதிரான  'குட்கா முக்தி அபியான்'  பிரசாரங்களுக்குப் பயன்பட்ட அதே எண்தான்,  இன்று நதிகளை மீட்க ஜக்கிவாசுதேவ்  வழியாக மீண்டும் புறப்பட்டிருக்கிறது. மக்கள் கொடுக்கும் மிஸ்டு கால் மூலம் அவர்களுடைய விபரங்களைப் பாதுகாத்து அவர்களை பி.ஜே.பி உறுப்பினர்களாகப் பயன்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதிதான் இது.பியூஷ்மனுஷ்

'பாரதப் பிரதமருக்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தயாராகுங்கள், ஜனநாயகம் மலர வேண்டுமென்றால், பாரதப் பிரதமரின் கரங்களை வலுப்படுத்துங்கள்' என்று ஜக்கி, வீடியோவில் பேசுகிறார்.  அதேபோல்,  'அனைத்துத் திட்டங்களும் நீண்ட காலத்துக்கான திட்டம்தான், தேர்தலுக்கான திட்டம் அல்ல' என்கிறார். அதாவது குறைந்த பட்சம், கங்கை உள்ளிட்ட ஆறு, நதிகளைப் பாதுகாக்க 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று சொல்லாமல் சொல்கிறார். வனங்களையும், மலைப் பகுதிகளையும் முற்றிலும் அழித்துவிட்டு ஆறு, நதிகள் குறித்து அதிகம் கவலைப்படக் கூடாது. 'ஆறு, நதிகளைக் காப்பாற்ற இந்த எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுங்கள்' என்று சினிமா நடிகர்கள் ஒருபக்கம் பேசி வருகிறார்கள். மிஸ்டுகாலுக்கும், நீர்நிலைப் பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

பசுமை மீட்பில் கின்னஸ் சாதனையை தங்கள் அமைப்பு செய்துள்ளதாக இணையத்தில் போட்டுள்ளனர். கின்னஸ் 'லிங்க்'கில் போய்த்தேடினால், அப்படியொரு சாதனையே, இல்லை. மொத்தத்தில் மத்திய பி.ஜே.பி அரசுக்கான பிரசாரத்தை மட்டுமே ஜக்கியின் அமைப்பு கையில் எடுத்துள்ளது" என்கிறார் பியூஷ்மனுஷ்.  அக்டோபர் 2-ம் தேதி டெல்லியில்  பயணத்தை முடிக்கவுள்ள ஜக்கி வாசுதேவ், 'டெல்லி பயண முடிவுக்குள்  30 கோடி மிஸ்டு கால்கள் தேவை' என்று திருச்சியில் பேசியுள்ளார்.

ஈஷா யோகமையத்தின் கோவை தலைமையிடத்தில் இதுகுறித்துக் கேட்டோம். "பிரதமர் மோடி இந்தத் திட்டத்தின் பின்னால் இருப்பதாகக் கூறுவதே மிகப் பெரிய தவறு. மக்கள் மீதான நல்லெண்ணத்துடன் நடக்கும் எந்தவொரு செயலுக்கும் இப்படியான அதிருப்தி குரல்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கும். இது முழுக்க, முழுக்க ஒரு தனியார்  செல்போன் எண். '10 விழுக்காடு மக்கள் ஒரு விஷயத்துக்காக குரல் கொடுத்தால், அதை சட்டமாக்கலாம்' என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதற்குத்தான் நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நிச்சயம்  நதிகளை மீட்போம், மற்றதை புறந்தள்ளுவோம்" என்றனர். 
-

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close