Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆதிவாசி வேஷம்போட்டு விவசாயிகள் நூதனப் போராட்டம் ! 

 

நூதன போராட்டம்

 

மதுரை வாடிப்பட்டியை அடுத்த 66- எம் உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் மலையில் கல்குவாரி வருவதையொட்டி அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கடலை, கொய்யா , வாழை போன்ற விவசாயப் பயிற்களை உடலில் கட்டிக்கொண்டு ஆதிவாசிகள் போன்று வேடம் அணிந்து கோஷங்கள் எழுப்பி நூதனப் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர் முத்துராஜ் கூறுகையில், 'எங்கள் பகுதியில் உள்ள பெருமாள் மலை மிகவும் பசுமையானது கொய்யா, மா, வாழை, கடலை உள்ளிட்ட பணப்பயிற்கை இந்த மலையைச் சுற்றிதான் விவசாயம் செய்துவருகிறோம்

பெருமாள் மலை

 

இந்நிலையில், இந்த மலையில் தனியார் நிறுவனங்கள் கற்களை வெட்டி எடுத்து இங்கேயே பாலிஷ் செய்து வெளியிடங்களுக்குக் கொண்டு செல்ல உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகிறது. இது ஏற்புடையதல்ல மதுரை மாவட்ட ஆட்சியர் இந்த மலையை ஏலம் விட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்ததற்கு பிறகு எந்தப் போராட்டமும் செய்யவில்லை. ஆனால், தற்போது கற்கள் வெட்டி எடுக்க ஏலம் கொடுத்துள்ளது வருத்தமளிக்கிறது. அதனால் இன்று ஆறாவது நாள் பழங்கால ஆதிவாசிகள் போன்று வேடம் அணிந்து போராட்டம் நடத்துகிறோம். இன்றுவரை எங்கள் போராட்டதிற்கு மாவட்ட ஆட்சியர் செவி சாய்க்கவில்லை. எனவே, நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற்றும் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் ஏராளமான பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் விவசாயிகளும் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close