Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்காவை அச்சுறுத்தும் இர்மா புயல்..!

irma, இர்மா புயல்

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இர்மா புயல், அமெரிக்காவைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கரீபியன் தீவுகளைக் காவு வாங்கிய இந்தப் புயல், அங்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. இந்த நூற்றாண்டின் பெரும் புயலாக இது கருதப்படுகிறது. பலத்த மழையும் 300 கி.மீ வேகத்துக்கு வீசிய சூறாவளிக் காற்றும் கரீபியன் தீவுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூறாவளியால் போர்டோ ரிகா, கியூபா, விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட நாடுகள் கடுமையான சேதங்களைச் சந்தித்தன.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைக் குறிவைத்த இர்மா, அங்கு ருத்ரதாண்டவம் ஆடியது. இதுவரை ஐந்து பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். பலரது நிலைமைகுறித்து விவரங்கள் வெளியாகவில்லை. தற்போதைய நிலையில், அங்கு 130 கி.மீ வேகத்தில் காற்று வீசிவருகிறது. அரசு சார்பில் பலத்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஃப்ளோரிடாவை பேரிடர் பகுதியாக அறிவித்துள்ளார். மேலும், அங்குள்ள மக்களை மீட்க துரித கதியில் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். அங்கு, மக்களைத் தங்கவைக்க தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் தூதரகங்களும், சேவை அமைப்புகளும் களத்தில் இறங்கியுள்ளன. 55 லட்சம் பேர் வரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close