Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓய்வு முடிவை அறிவித்தார் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி

ram jethmalani, ராம் ஜெத்மலானி

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தனது 70 ஆண்டு கால வழக்கறிஞர் பயணத்திலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய பார் கவுன்சில் சார்பாக, உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், “வழக்கறிஞர் தொழிலிலிருந்து, ஓய்வுபெற முடிவு எடுத்திருக்கிறேன். என் உயிர் உள்ளவரை, பொது வாழ்வில் இருப்பேன். அரசியலில் ஊழலை ஒழிப்பது, என் புதிய பணியாக இருக்கும். ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக என் போராட்டத்தைத் தொடர்வேன். ஊழலை எதிர்க்கும் வழக்கறிஞர்களுக்கு, ஆலோசனையையும் வழங்குவேன். தற்போது ஆளும் அரசாக இருக்கட்டும், இதற்கு முன் ஆண்ட அரசாக இருக்கட்டும், எல்லோரும் நாட்டை ஓர் இக்கட்டான சூழலுக்குத் தள்ளிவிட்டனர். இவர்களை எதிர்த்துப் போராட வழக்கறிஞர்களும் மக்களும் முன்வந்து நிற்க வேண்டும்”, எனப் பேசி முடித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close