Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மா பூங்கா அமைக்கும் இடங்களைப் பார்வையிட்ட கலெக்டர்

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், கருப்பம்பாளையத்திலும் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நாகம்பள்ளியிலும் அம்மா பூங்கா அமைப்பதற்காக இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் பார்வையிட்டார்.


 

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர்கள் சந்திரசேகரன், ராம்குமார், நில அளவையர் புவனேஸ்வரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது அவர் பேசும்போது, "கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மாயனூரில், இயற்கை எழிலோடு அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை, ஏராளமான சிறுவர், சிறுமியரும் பொதுமக்களும் பயன்படுத்தி மகிழ்ந்துவருகின்றனர். அதேபோல, கரூர் மாவட்டத்திலுள்ள  ஊராட்சி ஒன்றியம் வேட்டமங்கலம், ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியிலும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் ஆண்டான்கோவில் கிழக்கு, காக்காவாடி,கருப்பம்பாளையம், புத்தாம்பூர் ஊராட்சிகளிலும், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், வதியம் ஊராட்சி, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், போத்துராவுத்தன்பட்டி, தோகைமலை ஊராட்சி ஒன்றியம், கூடலூர், கழுகூர் ஊராட்சி, கடவூர் ஊராட்சி ஒன்றியம், கடவூர் பண்ணப்பட்டி, பாலவிடுதி, மஞ்சன்நாயக்கன்பட்டியிலும் எனத் தலா ரூ 20 லட்சம் மதிப்பில் அம்மா பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.

கருப்பம்பாளையத்திலும் நாகம்பள்ளியிலும், தேசிய நெடுஞ்சாலை எண் 7 பகுதியை ஒட்டி, இயற்கை அழகோடு ஆற்றோரம் அம்மா பூங்கா அமைப்பதற்காக இடம் பார்வையிட்டு ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. இடம் முடிவான பின்னர், பணிகள் தொடங்க உள்ளன. இதன்மூலம், இந்தப் பகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள், தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்வோர் என ஏராளமானோர் பயனடைய உள்ளனர்" என்று தெரிவித்தார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close