Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''குதிரை பேரத்துக்கு ஆளுநரே துணைபோகிறார்'' - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

’’குதிரை பேரத்திற்கு தமிழக ஆளுநரே துணைபோகிறார்’’ என தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  22-வது மாநில மாநாடு ஆலோசனைக் கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ‘’ வரும் 2018-ம் ஆண்டு, பிப்ரவரி 17 முதல் 20-ம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள கட்சித் தோழர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.  போராட்டம் என்பது ஜனநாயக உரிமை.  நீட் தேர்வுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மாணவ மாணவிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்துவதோடு, கைதுசெய்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

தூத்துக்குடியில் ஜி.ராமகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பு

இந்தப் போராட்டத்தில் கைதுசெய்யப்பட்ட அனைவரையும்  உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மத்திய அரசு உருவாக்கியுள்ள கல்வி நிறுனங்களுக்கு நீட் தேர்வு பொருந்தாது. இதற்கென தனிச்சட்டம் இருப்பதைப்போல தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். இந்தத் தேர்வால் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும், நீட் தேர்வால் மருத்துவர் கனவு கலைந்துபோனதை நினைத்துப் பல மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதியதமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்தியது, தன்னை நம்பியிருக்கும் தலித் மக்களுக்கு அவர் செய்யும் துரோகத்தை வெளிக்காட்டுகிறது. வரும் 13-ம் தேதி நீட் தேர்வைக் கண்டித்து தி.மு.க நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும். 

தமிழக அரசு செயல்படவே இல்லை. எடப்பாடி பழனிசாமியின் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தியும் ஆளுனர் அவர்கள் இன்னமும் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி உத்தரவிடாதது ஏன்? எம்.எல்.ஏ-க்களின் குதிரைபேரத்திற்கு ஆளுனரே துணைபோகிறார். ஆளுநர் பா.ஜ.க-வின் பிரதிநிதியாகவே தற்போது வரை செயல்பட்டுவருகிறார் ‘’ என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close