Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆண்டுக்கு 6,000 பேரைத் தேர்ந்தெடுக்க இன்ஃபோசிஸ் நிறுவனம் திட்டம்!

இந்தியாவில், இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆண்டுக்கு 6000 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தகவலை, இடைக்காலத் தலைமை நிர்வாகியாகப் பதவி வகித்துவரும் பிரவின் ராவ், முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். 

இன்ஃபோசிஸ்

தற்போது, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விசா சார்ந்த பிரச்னைகள் தீர்ந்திருப்பதால், புதிதாக ஆட்களைத் தேர்வுசெய்ய வேகம் காட்டிவருகிறது இன்ஃபோசிஸ் நிறுவனம். 'தற்போது, 10 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் கல்லூரியிலிருந்து வெளியே வருகிறார்கள். ஆனால், 20-30% பேர் மட்டுமே தகுதியோடு வருகிறார்கள். இவர்களில் இருந்து தேவையானவர்களைப் போட்டிபோட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. தற்போது, 1,98,553 பேர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார்கள். சிக்கலான நிலையிலும், இந்த ஆண்டு அமெரிக்காவில் மட்டும் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம். தற்போது இந்தியாவிலும் நிறையப் பேரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகிவருகிறோம்' என்கிறார், பிரவின் ராவ் . 

கடந்த சில மாதங்களாக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களுக்கும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குமிடையே மோதல் போக்கு நிலவிவந்தது. இந்த மோதலால், தலைமை நிர்வாகியாகப் பதவி வகித்த விஷால் சிக்காவும், நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்த சேஷசாயியும் பதவி விலகினார்கள். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நிலேகனி நிறுவனத்தின் தற்காலிகத் தலைவராகவும், இடைநிலைத் தலைமை நிர்வாகியாக பிரவின் ராவும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் வேகமெடுக்கத் தொடங்கியிருக்கின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close