Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாக்டோ - ஜியோ போராட்டம் : மாவட்ட ஆட்சியரகத்தில் திரண்ட அரசு ஊழியர்கள்.!

புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடந்த சில தினங்களாக மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். சாலை மறியல், ஒப்பாரி வைத்தல் என பல்வேறு வழிகளில் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துவரும் போராட்டக்காரர்கள் இன்றைய தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில் நின்றுகொண்டு தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி முழக்கமிட்டனர்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணியாற்றும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 1000 பேர் வரை இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் திருப்பூர் - பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close