Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக் கடைக்கு எதிராக குமரி கலெக்டரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில்  பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கிடையே புதிதாக திறக்கவிருக்கும் மதுக்கடைகளை திறக்கவிடாமல் தடுத்து நிறுத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானை சந்தித்து அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து  தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளுக்குப் பதிலாக குடியிருப்பு பகுதிகளில் புதிய மதுக்கடைகளை திறக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல இடங்களில் பெண்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

இந்நிலையில் குமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கிடையே இருந்த மதுபானக் கடைகள் பொதுமக்களின் போராட்டத்தால் மூடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் பொதுமக்களுக்கு இடையூறாக பேரூராட்சி அலுவலகம் எதிரில் பேருந்து நிலையம் எதிரில் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கிடையே மீண்டும் புதிதாக மதுக்கடைகள் அமைப்பதற்கு அரசும் அதிகாரிகளும் முயற்சி செய்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திட்டுவிளை மசூதி அருகில் வரவுள்ள மதுக்கடையை திறக்கவிடாமல் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டும் தோவாளைப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அதுபோல கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே நெய்யூர் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை மீண்டும் திறப்பதாக வந்த தகவலின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மதுபானக் கடையை திறக்கக் கூடாது என்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் இன்டர்நேஷனல் கேன்சர் சென்டர், பள்ளிவாசல், பள்ளிக்கூடங்கள், தேவாலயம் மற்றும் மருத்துவமனைகளும் அந்த இடத்தில் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. மக்கள் அதிகமாக கூடும் அருகிலேயே இயங்கி வந்த அந்த பாரை மூட வலியுறுத்தி பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக நீதிமன்ற உத்தரவுப்படி அது மூடப்பட்டது.

நூறு மீட்டர் இடைவெளிக்குள் மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்றவை இருக்கும் இடங்களில் மதுக்கடைகளைத் திறப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மீண்டும் அந்த பாரை திறப்பதற்கு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவையும் மீறி மாவட்ட நிர்வாகம் விதிகளுக்கு முரணாக அந்த பாரை திறக்க அனுமதி அளித்ததாகவும் கூறப்படுகிறது .எனவே, மாவட்ட நிர்வாகம் அப்பகுதி மக்களின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும், அச்சுறுத்தலாக உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூட  நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள்  மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவானை சந்தித்து மனு அளித்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close