Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐந்து வருடம் நடைபெற்ற கொலை வழக்கு..! கணவன், மனைவி இருவருக்கும் ஆயுள் தண்டனை

தேனி மாவட்டம் பெரியகுளம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், கடந்த 2012-ம் ஆண்டு தேவாரத்தைச் சேர்ந்த போஸ்ராஜ் என்பவரை சொத்துத் தகராறில் ரெங்கநாதன் மற்றும் அவரது மனைவி அழகம்மாள், அமிதராஜ் ஆகியோர் சேர்ந்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு கடந்த ஐந்து வருடங்களாக தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அவ்வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பளித்து உத்தரவிட்டார் நீதிபதி செந்தில் குமரேசன்.

விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளிகளான ரெங்கநாதன், அவரது மனைவி அழகம்மாள் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், 1,500 ரூபாய் அபராதமும், மூன்றாம் எதிரி அமிதராஜுக்கு மூன்று ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும், ரூபாய் 500 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனால் நீதிமன்ற வளாகம் சற்று பரபரப்பானது. குற்றவாளிகள் மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close