Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுற்றுலா தின ஓவியப் போட்டி..! நெல்லை ஓவியர்களுக்கு அழைப்பு!

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சுற்றுலா தின ஓவியப்போட்டி நடைபெற உள்ளதால், அதில் பங்கேற்க ஓவியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா தின ஓவியப்போட்டி

உலகின் மிகப்பெரிய துறையாகவும் இரண்டாவது பெரிய தொழிலாகவும் இருப்பது சுற்றுலா. இது தனியான துறையாக அல்லாமல், போக்குவரத்து, உணவு, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என 5 துறைகளைச் சார்ந்தது. வளரும் நாடுகளுக்கு மிகப்பெரிய பலம் சுற்றுலா. இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ம் தேதி உலக சுற்றுலா தினமாகக் கொண்டாடப்படுகிறது.

நெல்லை அருங்காட்சியகம்

இதையொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம் என நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’இந்த சிறப்பு ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்கள், தங்களைக் கவர்ந்த நெல்லை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்கள் ஏதேனும் ஒன்றை ஓவியமாக தீட்டலாம். 

பொதுவாக வழக்கத்தில் உள்ளதும், இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதுமான வர்ண வகைகளைப் பயன்படுத்தி இந்த ஓவியத்தை வரையலாம். படம் வரைந்த தாளின் பின்பக்கத்தில் பெயர், வயது மற்றும் பிறந்த தேதி, வீட்டு முகவரி, தொடர்புக்கான செல்போன் எண், இமெயில் முகவரி ஆகியவற்றை தவறாமல் எழுதவேண்டும். 

அதில் இருந்து தேர்வு செய்யப்படும் சிறந்த மூன்று படைப்புக்களுக்கு பரிசு வழங்கப்படும். போட்டியில் பங்கேற்ற அனைத்துப் படைப்புகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். படைப்புக்களை வரும் 24-ம் தேதிக்குள் அருங்காட்சியகத்தில் கிடைக்குமாறு நேரிலோ தபாலிலோ அனுப்பலாம். 27-ம் தேதி அருங்காட்சியகத்தில் நடைபெறும் கண்காட்சியில் போட்டிக்கு அனுப்பப்பட்ட அனைத்து படைப்புகளும் இடம்பெறும். அன்றைய தினமே வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close