Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பர் நாதிர்ஷா மாயம்

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் நெருங்கிய நண்பரும் நடிகருமான நாதிர்ஷா மீது போலீஸார் ஆரம்பம் முதல் சந்தேகப் பட்டு வந்தனர். ஏற்கெனவே நடிகை வழக்கு தொடர்பாக திலீப்பிடமும், நாதிர்ஷாவிடமும் போலீஸார் பல மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவரின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதை போலீஸார் கண்டுப்பிடித்தனர். சிறையில் இருந்துகொண்டு வழக்கில் முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில் நாதிர்ஷாவிடம் செல்போனில் பேசிய முக்கிய ஆதாரம் போலீஸிடம் இருக்கிறது. இந்த நிலையில் நடிகையை ஆபாசமாக படம் பிடித்த செல்போன் குறித்து போலீஸுக்குத் துப்புக் கிடைத்தது.

அந்த செல்போன் எங்கு இருக்கிறது என்பது நாதிர்ஷாவுக்கு தெரியும் என்பதை போலீஸார் கண்டு பிடித்து விட்டனர். இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு கடந்த 6-ம் தேதி நடிகர் நாதிர்ஷாவுக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அன்றுதான் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாதிர்ஷா அட்மிட் ஆனார். அப்போது அவர் தன்னை போலீஸ் கைது செய்வதாகக் கூறி மிரட்டுவதாகவும், எனவே, தனக்கு முன் ஜாமீன் அளிக்குமாறு  கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் போலீஸார் கைது செய்வதை தடுக்க முடியாது எனத் தெரிவித்தது.

வழக்கை 13-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதனால் நாதிர்ஷாவை எந்த நேரத்திலும் போலீஸார் கைது செய்யலாம் என்கிற சூழல் உருவானது. மருத்துவமனையில் இருந்து நாதிர்ஷா தப்பிக்காமல் இருக்க போலீஸார் மப்டியில் மருத்துவமனையைக் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்த நடிகர் நாதிர்ஷா திடீரென மாயமானார். ஆனால், அவரது கார் மருத்துவமனை வாளாகத்தில்தான் நிற்கிறது. அவர் வேறு ஒரு காரில் சென்று விட்டதாகப் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். நாதிர்ஷா தலைமறைவாக இருக்கிறாரா? இல்லை போலீஸ் தரப்பில் விசாரணைக்காகப் பிடித்து சென்று விட்டார்களா என்று தெரியாமல் மருத்துவமனை குழம்பி வருகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் அதிகாரபூர்வமான எந்தத் தகவலும் இன்னும் அளிக்கப்பட வில்லை. நடிகர் நாதிர்ஷா மாயமான விஷயம், நடிகை கடத்தல் வழக்கை இன்னும் பரபரப்பாக மாற்றியிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close