Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழிசை நீட் தேர்வு எழுதி டாக்டர் பட்டம் பெறட்டும்' - சீமான்!

நீட் தேர்வு விவகாரம், பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்துவருகின்றன. இதனிடையேதமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் சார்பில், மறைந்த மாணவி அனிதாவுக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய இயக்குநர் ரஞ்சித், 'தமிழர்கள் சாதியாகப் பிரிந்திருக்கும் வரை, தமிழ்த்தேசியம் எட்டாக்கனி' என்று ஆவேசமாகக் கூறியிருந்தார். 

சீமான்

 

இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்குச் சென்ற அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " ரஞ்சித் சொல்வது உண்மைதான். சாதியாகப் பிரிந்திருக்கும் வரை தமிழர்கள் என்ற ஒற்றுமை வராது. இன ஒற்றுமை வராமல் அரசியல் வலிமை வராது. அரசியல் வலிமை பெறாமல் அதிகார வலிமை பெறமுடியாது. இதுதான் அடிப்படை. அவரின் கருத்தில் உள்ள உண்மையை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தமிழர்களாக ஒன்றிணைவது சாத்தியமில்லை என்ற ரஞ்சித்தின் கருத்தை ஏற்க முடியாது.

நீட் தேர்வுக்கு ஆதரவாக தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். அவர், நீட் தேர்வு எழுதி மீண்டும் புதிய டாக்டர் பட்டம் பெற்றபின் வேண்டுமானால் அதற்கு ஆதரவாக  பிரசாரம்செய்யட்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close