Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் அஞ்சலி!

மானுவேல் சேகரனின் 60-ம் நினைவு நாளான நேற்று, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த கிராமமான செல்லூரில் அவருக்கு குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு மரியாதைசெலுத்தினார். அவருடன் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மேலூர் சாமி, முன்னாள் அமைச்சர்கள் வ.து. நடராஜன், இன்பத்தமிழன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தினகரன் மரியாதை

மேலும், தமிழக அமைச்சர்கள் சரோஜா, ராஜலெட்சுமி, மணிகண்டன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோருடன் ஏராளமான அ.தி.மு.க தொண்டர்களும் இமானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, தி.மு.க முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் தமிழரசி, சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் திசைவீரன், முருகவேல், மாவட்டச் செயலாளர் திவாகரன் உள்ளிட்ட தி.மு.க-வினர் அஞ்சலிசெலுத்தினர். ம.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., சதன் திருமலைக் குமார், புதூர் பூமிநாதன், மாவட்டச் செயலாளர் குணா உள்ளிட்டோர் அஞ்சலிசெலுத்தினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close