Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழில் அறிமுகமாகும் 'அர்ஜுன் ரெட்டி' நாயகி ஷாலினி பாண்டே!

தெலுங்கு சினிமாவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கியப் படமாக, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருக்கும் `அர்ஜுன் ரெட்டி' பாராட்டப்பட்டுவருகிறது. 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் நாயகியாக நடித்துள்ள ஷாலினி பாண்டே, 'நடிகையர் திலகம்' படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.

ஷாலினி பாண்டே

கறுப்பு வெள்ளை காலத்தில் இந்திய சினிமாவைக் கலக்கிய நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படம், 'நடிகையர் திலகம்'. தெலுங்கில் 'மகாநதி', தமிழில் 'நடிகையர் திலகம்' ஆகிய தலைப்புகளில் தயாராகிவருகிறது. ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் நிலையில், 'நடிகையர் திலகம்' படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் 'அர்ஜுன் ரெட்டி' கதாநாயகி ஷாலினி பாண்டே நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன்மூலம், தமிழில் அறிமுகமாகிறார் ஷாலினி.   

இந்தப் படத்தில் சாவித்ரியின் தோழி ஜமுனாவாக ஷாலினி பாண்டே நடிக்கவிருப்பதாகவும் இந்தக் கதாபாத்திரம் வரும் காட்சிகள், படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close