Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக மீனவர்கள் 12 பேர் கைது: மீண்டும் மீண்டும் அத்துமீறும் இலங்கைக் கடற்படை!

தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ளது.

மீனவர்கள்


தமிழக முதல்வர் மாறலாம், இந்தியப் பிரதமர் மாறலாம், மேலும், புதிய இந்தியாகூட பிறக்கலாம். ஆனால், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை மட்டும் மாறாத ஒன்றாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அந்த வரிசையில், நெடுந்தீவு அருகே, மீன் பிடித்துக்கொண்டிருந்த 12 மீனவர்களை நேற்று இரவு இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ளது. மேலும், அவர்களின் இரண்டு படகுகளையும் இலங்கைக் கடற்படை பறிமுதல்செய்துள்ளது. கைதுசெய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமில் வைத்து இலங்கைக் கடற்படையினர் விசாரணை செய்துவருகின்றனர்.


 கடந்த 31-ம் தேதி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை சென்றிருந்தபோது,  எட்டு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 178-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். இது தவிர, ஆயிரக்கணக்கான மீனவர்கள் சிறைபிடிப்புக்கு உள்ளாகினர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், அவ்வப்போது விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் படகுகள் விடுவிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close