Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெச்.ராஜாவை நியமிக்க என்ன தகுதி இருக்கிறது - சுப.உதயகுமார் கேள்வி

"சாரணர், சாரணியர் இயக்கத்துக்கு ஹெச்.ராஜா செய்த பணி என்ன? ப்ளூ சட்டை அணியும் அந்த இயக்கத்தைக் காக்கி டவுசர் கொடுத்து சங்பரிவார் இயக்கமாக மாற்றும் முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற மோசமான விளைவுகளை உண்டாக்கும் முயற்சியை அரசுகள் கைவிட வேண்டும்" என்று பச்சைத் தமிழகம் கட்சி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

பச்சைத் தமிழகம் ஒருங்கிணைப்பாளர்

இது தொடர்பாக, பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரான சுப.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாரணர், சாரணியர் இயக்கத்துக்கு பி.ஜே.பி ஹெச்.ராஜாவை நியமிக்க பாசிச அடிமை அரசு துடிப்பதன்மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் காக்கி டவுசரும், அதன் கொள்கைகளும் கொடுத்து, அடுத்த தலைமுறையினருக்கு ஆர்.எஸ்.எஸ்-ஸின் சித்தாந்தங்களை விதைக்க பா.ஜ.க அரசு மறைமுகமாக முயல்கிறது. தமிழக அரசை நிர்பந்தித்து,பிஞ்சுக் குழந்தைகளின் மத்தியில் நஞ்சை விதைக்கத் துடிக்கிறது.

பேனாக்களும் புத்தகங்களும், நோட்டுகளும் தூக்கவேண்டிய வயதில், கத்திகளைத் தூக்கி, புத்திக்கூர்மையை மழுங்கடித்து, இந்துத்துவா விதைகளை விதைத்து, தமிழகமெங்கும் காவி மையத்தைப் பள்ளிகளிலிருந்து தொடங்க பி.ஜே.பி திட்டமிடுகிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க சாரண, சாரணியர் இயக்கத்தில், காவியைத் தூக்கிப் பிடிப்பதோடு, மதக்கலவரத்தையும் சாதிக் கலவரத்தையும் தூண்டும் விதத்தில் தொடர்ந்து பேசிவருகிறது.போராளிகளை மட்டுமல்லாமல் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களையும்  தேசவிரோதிகளாகப் பேசிவரும் பி.ஜே.பி-யின் ஹெச்.ராஜாவை நியமிக்க என்ன தகுதி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close