Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்ச்சைக்குரிய விநாயகர் விளம்பரம்... ஆஸ்திரேலிய அரசிடம் இந்தியா புகார்

ganesha advertisement, விநாயகர் விளம்பரம்

இந்து மதத்தின் முதல் கடவுளான விநாயகர், ஆட்டுக்கறி சாப்பிடுவது போன்ற விளம்பரம் ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விளம்பரத்தைத் தடை செய்யக்கோரியும், இவ்வாறு படமாக்கிய விளம்பர நிறுவனத்தின்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆஸ்திரேலிய அரசிடம் இந்தியா புகார் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில், ஆட்டிறைச்சி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அந்நாட்டின் இறைச்சி மற்றும் கால்நடை ஆய்வுகள் நிறுவனம், ஒரு விளம்பரத்தை சமீபத்தில் வெளியிட்டது. அதில், விருந்து நடக்கும் இடத்தில் இந்துக் கடவுள் விநாயகர், ஏசு, புத்தர், சீசர் என்று அனைவரும் ஒரே மேஜையில் அமர்ந்து பேசுகிறார்கள். அப்போது, ஒயின் குடித்துக்கொண்டே, இறைச்சியையும் அனைவரும் சேர்ந்து உண்பது போன்று காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் வெளியான முதலே உலகம் முழுவதும் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் வலுத்துவருகின்றன. இந்நிலையில், கேன்பெராவில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில், ஆஸ்திரேலிய அரசிடம் புகார் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த விளம்பர நிறுவனம்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close