Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

தடையை மீறி ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

madurai hc


தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே இருந்த பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் நடத்த கடந்த வியாழக்கிழமை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது

அரசுத்தரப்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், 'ஜாக்டோ ஜியோ' அமைப்பின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தால் அரசுப் பணிகளும், அரசுப் பள்ளி செயல்பாடுகளும் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தடையை மீறி போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சேகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளிடம் முறையீடு செய்தார். அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், ’தடையை மீறி ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close