Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமான கட்டணத்தை விஞ்சும் புல்லட் ரயில் கட்டணம்!

bullet

மும்பை-அகமதாபாத் இடையே வேகமான ரயில் மற்றும் அதிவேக ரயில் என இரு புல்லட் ரயில்களை  இயக்க இருப்பதாக,  இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது. இந்த மும்பை - அகமதாபாத் ரயில் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா, வரும் 14-ம் தேதி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, இந்திய பிரதமர் மோடி  முன்னிலையில்  நடைபெறவிருக்கிறது.  இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,10,000 கோடி. இதில், ரூ.88,000 கோடி  ஜப்பானிடமிருந்து கடனாகப்  பெறப்படுகிறது.

வேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில், மும்பை - அகமதாபாத் இடையேயான தூரத்தை 2:58 நிமிடங்களில் கடக்கும். இந்த ரயில், எட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதிவேக ரயில், பயணதூரத்தை 2:07 நிமிடங்களில் கடக்கும். இந்த ரயில், மிக முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். புல்லட் ரயில்களுக்கான கட்டணம் 3,000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை - அகமதாபாத் இடையேயான விமானக் கட்டணமே தற்போது 1,500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close