Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெள்ளலூர் வாய்க்கால் மீது இருந்த ஆக்கிரமிப்புகள் 40 ஆண்டுகளுக்குப் பின் அகற்றம்!

வெள்ளலூர் குளத்துக்குத் தண்ணீர் செல்ல பயன்படும் ராஜ வாய்க்கால் மீது நாற்பது ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் இருந்தன. தற்போது அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்புகள் அகற்றிய பின் பார்வையிடும் மக்கள்

வெள்ளலூர் குளத்துக்குத் தண்ணீர் செல்வதற்கு பயன்படும் ராஜ வாய்க்கால் மீது நாற்பது ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. வாய்க்கால் மீதிருந்த வீடுகளுக்குப் பதிலாக, தகுதியான மாற்று வீடுகள் வழங்க பலமுறை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டன. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக, மாற்று வீடுகள் வழங்கிட சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் வந்தன. இதுதொடர்பாக, சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் மூலமாக அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணத்து கூட்டம் நடத்தியது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு. அதைத் தொடர்ந்து, அங்கிருந்த மக்களுக்கு 1400 வீடுகள், குடிசை மாற்று வாரியம் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால்,  இன்று வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, 'வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பேருதவியாக இருந்த எங்கள் தன்னார்வலர்களுக்கும், குடிசை மாற்று வாரிய கோவை மண்டல தலைமை அதிகாரி ராஜசேகருக்கும், கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயனுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரனுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கும் ஏனைய துறைகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு எங்களது கோரிக்கைகளுக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருந்து வரும் ஊடக நண்பர்களுக்கும் எங்களது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்' என்று கூறியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close