Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மொபைல் ஆதார் எண் இணைப்புக் கட்டாயமா, இல்லையா ? அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ ரிப்போர்ட்!

"தாரின்றி இன்று அணுவும் அசையாது " என்ற அளவுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் சலுகைகள் அனைத்துக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வங்கிக் கணக்குடன், பான் எண்ணுடன், ஓட்டுநர் உரிமத்துடன், ரேசன் கார்டுடன் இறுதியாக இறப்பைப் பதிவு செய்வதற்கும் அவசியமானது. 

ஆதார்

 

கடந்த வருடம் சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்க வேண்டும் என்று 'லோக்நிதி' என்ற தன்னார்வு அமைப்பு உச்ச ராஜ்குமார் பழனிச்சாமிநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டில் உள்ள அனைத்து சிம் கார்டுகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து, வருகின்ற பிப்வரி 18-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்காத மொபைல் எண் செயலிழப்புச் செய்யப்படும் என்று சில நாள்களுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் சமூக ஆர்வலரும், ஆர்.டி. ஐ மூலமாகப் பல்வேறு தகவல்களைப் பெற்றுவருபவருமான ராஜ்குமார் பழனிச்சாமி என்பவர்  மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமா என்றும், ஆதார் கார்டு இல்லாத நபர்களின் மொபைல் இணைப்பு துண்டிக்கப்படுமா என்றும் ஆர்.டி.ஐ மூலமாகத் தகவல் கோரியிருந்தார். இதற்குப் பதிலளித்த மத்திய அரசு " இது தொடர்பாக நாங்கள் எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்றும், தங்களிடம் எந்தத் தகவல்களும் இல்லை என்றும்" பதிலளித்துள்ளது. 

மத்திய அரசு மொபைல் எண்ணுடன் ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வந்த வேளையில் இந்தத் தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close