Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகாமகம் நடத்திய துறவியர் மாநாட்டில் பழநி ஆதீனம் பெருமிதம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இன்று நடைபெற்ற காவிரி மஹா புஷ்கரத்தை முன்னிட்டு, இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில பாரதிய துறவியர் மாநாடு நடைபெற்றது.  

 

pushkaram

இந்த மாநாட்டில் சிரவை ஆதீனம் முனைவர் குமரகுரு சுவாமிகள், பழநி ஆதீனம் திருப்பெருந்திரு சாது சண்முக அடிகளார், தென்சேரி மலையாதீனம் சீர்வலசீர் முத்துக்குமர சுவாமி அடிகளார், சிவகிரி ஆதீனம் சிவத்திரு பாலமுருகன் சுவாமிகள் உள்ளிட்டோருடன் நூற்றுக்கணக்கான ஆண், பெண் துறவிகளும் கலந்து கொண்டனர். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக சிவசக்தி ருத்ரதாண்டவமும், திருகல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி, கரகாட்ட நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. அதன்பின் காவிரி புஷ்கர சிறப்பு ஏடு வெளியிட்டு விழா நடைபெற்றது.  

மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய பழநி ஆதீனம், "திருப்பெருந்திரு சாது சண்முக அடிகளார், புஷ்கரனி என்று சொல்லக்கூடிய புனித நிகழ்ச்சி நீண்டகாலமாக நடைபெற்றுவருகிறது. தற்போது 144 ஆண்டுகளுக்குப் பின் ஒருமுறை மட்டுமே நடைபெறக்கூடிய மகாநிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.  இந்த புஷ்கர விழாவை வெகுசிறப்பாக நடத்த வேண்டும் என்பதற்காக, இராமாநந்தா சுவாமி ஓராண்டுக்கு முன்னரே இதற்குண்டான முயற்சிகளைத் தொடங்கினார்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்தில் மகாமக விழாவைத் துறவிகள் எல்லோரும் சேர்ந்து நடத்தினோம். அதுபோல தற்போது புஷ்கர விழாவும் துறவிகள் முன்னிலையில் வெகுசிறப்பாக நடைபெற்றுவருகிறது.

வடஇந்தியாவில் கும்பமேளா போன்ற விழாவை நடத்தும்போதெல்லாம் ஏராளமான இந்துத் துறவிகள் கலந்துகொண்டு சிறப்புச் செய்கின்றனர். ஆனால், தென்இந்தியாவில் அதுபோல நடத்துவதில்லை. எனவேதான், மகாமகத்திலிருந்து துறவியர் சங்கம் முயற்சி மேற்கொண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் அங்கு கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இதுபோல, துறவியர் பெருமக்களையெல்லாம் ஒருங்கிணைத்து, அவ்வப்போது இதுபோன்ற விழாக்களை நடத்த வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். இன்று நாமெல்லாம் காவிரியில் ஒன்றுகூடி இருக்கிறோம்.  

இதுபோன்ற புஷ்கர விழாவில் நீராடுவது நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தைத் தரக்கூடியது.  நம்மிடம் உள்ள இடர்களெல்லாம் நீங்கும், இன்பங்கள் பெருகும் அதேநேரத்தில், காவிரியைத் தூய்மைபடுத்த மத்திய, மாநில அரசுகளிடம் துறவியர் சங்கம் சார்பில் வலியுறுத்தி இருக்கிறோம். காவிரியின் புனிதம் குறித்தும், அதில் குப்பைகளைக் கொட்டாமல் பாதுகாக்கவேண்டியும் பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வுப் பிரசாரம் செய்துவருகிறோம். காவிரிக்கரையோரம் உள்ள கோயில்களைப் புதுப்பித்தும், படித்துறைகளைச் சீரமைத்தும் வருகிறோம்.  இதுபோன்ற நல்ல விஷயங்கள் யாவும் தொடர வேண்டும். அதற்கு, துறவியர் சங்கம் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்றார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close